Wednesday, December 12, 2018

இனி சாத்தியமே இல்லை...


சாத்தியம் இல்லை என்று நினைத்தேன்...

முடிவில்லா அலுவல்...
முடிக்க முடியா பணிகள்...

துவந்துவிட்ட துடிப்பு...
தூக்கம் கலைக்கும் கனவு...

பிடி இன்றி திரிந்தேன்...
பணி துறக்க நினைத்தேன்..

இனி சாத்தியம் இல்லை என்று நினைத்தேன்...

பரித்தியாய் வந்தாய்...
பயம் துடைத்தாய்...
மறைந்து மறந்து விட்ட என்னை..
எனக்கே காட்டினாய்...

கண்டித்தாய்...
அறிவுரை கூறினாய்...
தோழன் ஆனாய்...
தமயனும் ஆனாய்...

சாத்தியம் இல்லை என்று நினைத்தேன்...

உரையடினாய்...
உறவாடினாய்...
உயிரினும் மேலான உணர்வு தந்தாய்...

நம்பிக்கை ஊட்டினாய்...
என்னை எனக்கே காட்டினாய்...

சாத்தியம் இல்லை என்று நினைத்தேன்...

நீ! சாத்தியம் இல்லை என்று நினைத்தேன்...

ஆனால்...

கனவிலும் நினைவிலும் உன்னை மறப்பது..
இனி சாத்தியம் இல்லை...

என்னில் கலந்த உன்னை...
பிரிப்பது...
இனி சாத்தியம் இல்லை...

இனி சாத்தியமே இல்லை...

No comments:

Post a Comment